×

நடிகை கரீனாவுக்கு ஒமிக்ரான் இல்லை: மரபணு வரிசை பரிசோதனையில் உறுதி

மும்பை: நடிகை  கரிஷ்மா கபூரின் சகோதரி நடிரை கரீனா கபூர். நடிகை மலைக்கா அரோராவின் சகோதரி  நடிகை அம்ரிதா அரோரா. இவர்கள் கரீனா மற்றும் அம்ரிதா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். அடிக்கடி ஒன்றாக நைட் பார்டிகளுக்கு செல்வார்கள்.  கொரோனா காலத்திலும் கட்டுப்பாட்டை மீறி  சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில்  கலந்து கொண்ட கரீனா கபூர்,அம்ரிதா அரோரா இருவருக்கும் கொரோனா இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி 13ம் தேதி  அறிவித்தது. இதனை தொடர்ந்து இருவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். நடிகை கரீனா கபூரின் வீடு சீல் வைக்கப்பட்டது.இவர்கள் இருவருடன் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் யாருக்கும் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரீனா கபூருக்கு ஒமிக்ரான் இருக்கிறதா என்று மரபணு வரிசை பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்த பரிசோதனை  அறிக்கையில் கரீனாவுக்கு ஒமிக்ரான் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post நடிகை கரீனாவுக்கு ஒமிக்ரான் இல்லை: மரபணு வரிசை பரிசோதனையில் உறுதி appeared first on Dinakaran.

Tags : Kareena ,Mumbai ,Kareena Kapoor ,Karishma Kapoor ,Malaika Arora ,Amrita Arora ,
× RELATED சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக...